ஆளுநர் ரவியை சந்திக்கும் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள்.! முக்கிய கோரிக்கைகளுக்கு மனு அளிக்க திட்டம்.!
தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று மாலை தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்திக்க உள்ளனர்.
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை , பாஜக நிர்வாகிகளுடன் சென்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மாலை 4.30 மணிக்கு மேல் தமிழக ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை ஆளுநர் ரவியிடம் பாஜக நிர்வாகிகள் அளிக்க உள்ளனர். அதில்,, பஞ்சமி நில விவகாரம், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து மனுவில் குறிப்பிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.