சச்சினின் மறக்க முடியாத ஆட்டம்…ஷார்ஜா மைதானம் கவுரவிப்பு.!!
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேலரி ஒன்றுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் கடவுள் சச்சின் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து, சச்சின் டெண்டுல்கரின் புகழ்பெற்ற ‘Desert Storm’ இன்னிங்ஸின் 25 ஆண்டு நிறைவை ஒட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேலரி ஒன்றுக்கு சச்சின் டெண்டுல்கர் பெயர் வைத்துள்ளது.
Sachin Tendulkar stand unveiled at the Sharjah Cricket Ground.#SachinTendulkar #SharjahCricketStadium pic.twitter.com/c96x4uXFaY
— MAHIAATI (@mahiaati) April 25, 2023
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 1998 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற போட்டியின்போது, மணற்புயல் வீசியது. இதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதற்கு பின் தொடர்ந்த ஆட்டத்தில், சச்சின் அதிரடியாக விளையாடினார் என்று கூறலாம். அந்த ஆட்டத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.
அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அவர் 138 ரன்கள் விளாசினார். இந்த புகழ்பெற்ற ‘Desert Storm’ இன்னிங்ஸின் ஆட்டத்தை நினைவு கூறும் விதமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேலரி சச்சின் டெண்டுல்கர் பெயர் வைத்து அவரை கவுரவித்துள்ளது.
மேலும் இதைபோல், இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்னோடியாக திகழும் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று 50 வயது நிறைவடைந்ததை ஒட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது நண்பர் பிரைன் லாரா பெயரில் புதிதாக கேட்ஸ் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.