IPL SRH vs DC: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு.!
ஐபிஎல் தொடரில் இன்றைய SRH vs DC போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதுவரை ஒரு போட்டியில் வென்றுள்ள டெல்லி அணி, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் இருக்கின்றன.
டெல்லி அணி கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றி பெற்று, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இன்று களமிறங்குகிறது. ஹைதராபாத் அணி தான் விளையாடிய கடைசி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால், இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி :
அபிஷேக் சர்மா, ஹாரி புரூக், ஐடன் மார்க்ரம்(c), மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென்(w), மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
டெல்லி கேபிட்டல்ஸ்:
டேவிட் வார்னர் (C), பிலிப் சால்ட் (W), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, சர்பராஸ் கான், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா