கிரிக்கெட் உலகின் கடவுள்… சச்சின் – ‘தி மாஸ்டர் பிளாஸ்டர்’…நெருங்க முடியாத சாதனைகள்…!!

Default Image

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால்  அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50- பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் எனும் போட்டியை பற்றி தெரியாதவர்களுக்கு கூட சச்சினை பற்றி கண்டிப்பாக தெரிந்திருப்பார்கள். அந்த அளவிற்கு சச்சின் கிரிக்கெட்டை பிரபலமாக்கினார் என்று கூறலாம். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் படைத்தை சாதனைகள் இன்று வரை பலரும் படைக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

அதுமட்டுமின்றி சச்சின் தான் விளையாடிய போட்டிகளில் முக்கியமாக நடுவரின் தீர்ப்புக்கு முன்னதாகவே தான் அவுட் என்று தெரிந்தால் தானாகவே வெளியேறிவிடுவார். இந்த குணம் பலராலும் பாராட்டப்பட்டது. இதன் கிரிக்கெட்டின் நேர்மையை அவர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பலருக்கும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்று தான் தெரியும் அதையும் தாண்டி அவர் நல்ல ஒரு ஆல்- ரவுண்டரும் கூட . ஆரம்ப, காலகட்டத்தில் இருந்தே பந்துவீச்சிலும்  பல விக்கெட்களையும் எடுத்துள்ளார். கடைசி ஓவரில் 6 ரன்கள் டிஃபன்ட் செய்யவேண்டும் என்றாலும் சச்சினை நம்பி கொடுக்கும் அளவிற்கு அவர் சிறந்த பௌவுளராக திகழ்ந்தார்.

சாதனை படைக்க ஓடிகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சாதனையாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை அவர் படைத்துள்ள நெருங்க முடியாத சாதனைகளை பற்றி பார்க்கலாம். 

சச்சினின் நெருங்க முடியாத சாதனைகள்

1 அதிகம் சதம் அடித்த வீரர்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தான் படைத்துள்ளார். அதன்படி, 49 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும், 51 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிலும் 100 சதம் விளாசியுள்ளார்.

2 .200 டெஸ்ட் போட்டிகளில் சச்சின்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் வீரராக 200 போட்டிகளில் களமிறங்கியது. சச்சின் மட்டும் தான் இதுவரை 200 டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஒரே வீரர். இந்த சாதனையை இன்னும் வரை யாரும் முறியடிக்கவில்லை.

3. அதிக முறை உலக கோப்பை

 

டெஸ்ட் போட்டியை போலவே அதிக முறை உலக கோப்பைகளில் பங்கேற்றது (அதாவது ஆறு முறை உலக கோப்பை தொடர்களில் சச்சின் பங்கேற்றுள்ளார்) மற்றும் அதிக முறை ஆட்டநாயகன் தொடர் நாயகன் விருது என பல்வேறு சாதனைகளை சச்சின் நிகழ்த்தி இருக்கிறார்.

4. 200 ரன்கள் அடித்த முதல் வீரர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் சச்சின் தான் நிகழ்த்தி உள்ளார். இவர் 2010-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் குவித்தார்.

5.அதிக முறை 90 ரன்கள் அடித்த வீரர்

அதிக முறை 90 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையும் சச்சின் படைத்துள்ளார்.  அதாவது 28 முறை 90  ரன்களுக்கு  மேல் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் என்று கூட கூறலாம்.

6.பாடப்புத்தகத்திலும் சச்சின்

பலருக்கும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு, சச்சின் சாதனை பயணத்தில் மேலும் ஒரு படிக்கட்டாக அவர் பற்றிய பாடம், 5ம் வகுப்பிற்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் பாரத் ரத்னா : சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்னோடியாக திகழும் சச்சின் டெண்டுல்கருக்கு 50 வயது நிறைவடைந்ததை ஒட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது நண்பர் பிரைன் லாரா பெயரில் புதிதாக கேட்ஸ் அமைந்துள்ளது.

மேலும், கடந்த 2013 ஆண்டு நவம்பர் 16 -ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த சச்சின் இதுவரை 34,357 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 100, சதம் 164 அரைசதங்களும்  அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்