பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு!
பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் 42 பக்க ஆவணங்களை பெற்று சிபிசிஐடி வழக்குப்பதிவு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைதிகளை சித்தரவதை செய்து பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் 42 பக்க ஆவணங்களை பெற்று சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை மறு வழக்குப்பதிவு செய்வதாக சிபிசிஐடி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.