அமமுகவில் புதிய பொருளாளர் மற்றும் செயலாளர் நியமனம் – டிடிவி தினகரன் அறிவிப்பு
அமமுகவின் புதிய பொருளாளராக வீரபாண்டி எஸ்.கே.செல்வம் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவிப்பு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் புதிய பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுகவின் பொருளாளராக எஸ்கே செல்வம், தலைமை நிலைய செயலாளராக எம்.ராஜசேகரன் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளர் மற்றும் கழக தலைமை நிலையச் செயலாளர் நியமனம். pic.twitter.com/VCgB9GMhyd
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) April 24, 2023