கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்… பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.!!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் போட்டியிடுகிறார்கள்.
பிரச்சாரம் தீவிரம்
தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில், தேர்தலுக்கு முன்னதாக வெற்றி பெறும் அதன் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்துவருகிறது.
அண்ணாமலை கருத்து
இந்நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், பெங்களூர் சென்றுள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ” கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கிறார்கள். அவர்கள் பாஜகவை ஆதரிக்க தயாராவும் உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம்.
ஒரு வேட்பாளர் 2 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளவர்கள் பற்றி இங்கு பேசுவது நன்றாக இருக்காது. வகுப்பறைகளில் ஹிஜாப் மட்டுமல்ல, காவி உடையும் வேண்டாம் என்கிறோம். பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு வழங்கியுள்ளது. தற்போது அடைந்துள்ள வளர்ச்சி பெரிதும் உறுதுணையாக இருக்கும்” என பேசியுள்ளார்.