டிஎஸ்பிஎஸ்சி தேர்வுத் தாள் கசிந்த விவகாரம்..! காவலர்களை தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!
டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடவிருந்த ஒய்.எஸ்.ஆர்.டி.பி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி போன்று ஆள்சேர்ப்புத் தேர்வுகளை வைத்து அரசு பணிசார்ந்த துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும். இந்நிலையில், கடந்த மார்ச் 5ம் தேதி உதவிப் பொறியாளர் (ஏஇ) தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர் தேர்வை மார்ச் 15ஆம் தேதி ஆணையம் ரத்து செய்தது.
இதையடுத்து, டிஎஸ்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி அங்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி (YSRTP) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இந்த வினாத்தாள் கசிந்த விவகாரத்தை தீவிரமாக பேசி வருகிறார். இந்த நிலையில், டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த சென்ற ஒய்.எஸ்.சர்மிளாவை தெலுங்கானா போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது, காரை விட்டு இறங்கி வந்த சர்மிளா காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிதுநேரத்தில் வாக்குவாதம் முற்றியதால் காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதையடுத்து, ஒய்எஸ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், ஒய்.எஸ் ஷர்மிளா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
#WATCH | YSRTP Chief YS Sharmila manhandles police personnel as she is being detained to prevent her from visiting SIT office over the TSPSC question paper leak case, in Hyderabad pic.twitter.com/StkI7AXkUJ
— ANI (@ANI) April 24, 2023