கதையை மாற்ற சொன்ன சூர்யா..நடிகரையே மாற்றிய ஹரி…விஷாலின் புதுப்படம் குறித்த ரகசிய தகவல்.!!
விஷாலின் 34-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகி படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், 3-வது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.
A positive and vibrant start for #Vishal34 – here are the pictures from the pooja this morning!#ProductionNo14 @VishalKOfficial #Hari @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj @Kirubakaran_AKR @TheVinothCj @kalyanshankar @pavsone @onlynikil pic.twitter.com/9MRxzKf2Kw
— Stone Bench (@stonebenchers) April 23, 2023
இவர்கள் மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து படத்தின் ரகசிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த படத்தின் கதையை இயக்குனர் ஹரி முதலில் சூர்யாவுக்கு தான் சொன்னாராம். ஆனால், சூர்யா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியுள்ளாராம் . அதற்கு ஹரி மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து ஹரி சூர்யாவுக்கு சொன்ன கதைகளில் ஒன்றில்தான் விஷால் நடிக்கிறார். விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பல அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதோடு ஃபேமிலி சென்டிமெண்டும் உண்டு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.