சாத்தான்குளம் வழக்கு: 3 மாதத்தில் முடிக்க உத்தரவு.. ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுஎன்றும் இன்னும் 6 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டுள்ளது.