மதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் – வானதி சீனிவாசன்
மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்ததற்கு பதிலாக டோர் டெலிவரி செய்யலாம் என்று வானதி சீனிவாசன் கருத்து.
இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒருநாள் நடைபெறும் நிகழ்வுகளில் அரசு அனுமதி பெற்று மதுபானங்கள் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனால், ஒருநாள் நிகழ்வான திருமண நிகழ்வுகளில் மதுபானம் அரசு அனுமதியுடன் பயன்படுத்தலாம் என தகவல் பரவியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
இதுகுறித்து, விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.
தலைவர்கள் கண்டனம்
இதற்கிடையில், அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களும் காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
மதுவை டோர் டெலிவரி செய்யலாம்
அவர் கூறுகையில், மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்ததற்கு பதிலாக டோர் டெலிவரி செய்யலாம் என்றும், மக்கள் சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை தமிழக அரசு செய்து வருகை வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.