Monday, June 3, 2024

கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி…11 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழைக்கு வாய்ப்பு 

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை,  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES