முன்பு 2ஜி.! இப்போ ஜி-ஸ்கொயர்.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

Default Image

ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு தனது வேலையை ஆரம்பித்து உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

அண்மையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அதில் உதயநிதி மற்றும் சபரீசன் (தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன்) ஆகியோர் அதிக சொத்து சேர்த்து வைத்ததாக கூறுவது போல குரல் பதிவு இருந்தது. இந்த ஆடியோவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக மறுத்தார். அது தான் இல்லை என கூறினார்.

G square
[File image]

அதே போல், இன்று வருமான வரித்துறையியானது, சென்னை, கோவையில் உள்ள ஜி- ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. தமிழகத்தை தாண்டி, தெலுங்கானா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஜி- ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Udhayanidhi Stalin
[File Image]

இந்த இரு சம்பவம் குறித்தும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்ய வேண்டும். அதனை கைப்பற்றி விட்டால், தமிழகத்தில் சொத்துவரி, பால்விலை, மின்கட்டணம் உள்ளிட்டவையை ஏற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இன்று வருமான வரித்துறை மூலம், மத்திய அரசு தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளது. ஜி- ஸ்கொயரால் திமுக வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அன்று 2ஜியால் திமுக ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருந்தார்.

Jayakumar ADMK

ஜி-ஸ்கொயர் நிறுவனமானது சில ஆண்டுகளுக்கு முன்னர் சில லட்சங்களில் இருந்து ஆரம்பித்து, 20, 30 கோடி என வளர்ந்து தற்போது பல்லாயிரம் கோடி சொத்து வந்துள்ளது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அதனால் தான் தற்போது ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்றும் அந்த சோதனை முடிந்ததும் விவரம் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்