தமிழக அரசு உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் – அண்ணாமலை

Default Image

திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என அண்ணாமலை ட்வீட். 

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒருநாள் நடைபெறும் நிகழ்வுகளில் அரசு அனுமதி பெற்று மதுபானங்கள் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனால், ஒருநாள் நிகழ்வான திருமண நிகழ்வுகளில் மதுபானம் அரசு அனுமதியுடன் பயன்படுத்தலாம் என தகவல் பரவியது.

பின் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.

TASMAC
[Image source : google ]

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்