சச்சின் 50-வது பிறந்தநாள்; கெளரவம் அளித்த ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம்.!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நுழைவு வாயில்களுக்கு, சச்சின் மற்றும் லாராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மைதானத்தில் நுழைவு வாயில்களை இந்திய ஜாம்பவான் மற்றும் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சக கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவின் பெயரில் திறந்து வைத்துள்ளது.
மைதானத்திற்கு வருகை தரும் அனைத்து வீரர்களும், புதிதாக திறக்கப்பட்டுள்ள லாரா-டெண்டுல்கர் கேட்ஸ் வழியாக களத்தில் இறங்குவார்கள். டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுபவதை ஒட்டி, இவ்விருவருக்கும் இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னி கிரிக்கெட் மைதானம் சச்சினுக்கு எப்போதும் சிறப்பான ஒரு மைதானமாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்த சிட்னி மைதானத்தில் தான் சச்சினின் முதல் டெஸ்ட் சதம் வந்தது. சிட்னி மைதானத்தில் 13 சர்வதேச போட்டிகளில், விளையாடியுள்ள சச்சின் 1,100 ரன்கள்(சராசரி-100) எடுத்துள்ளார், இதில் நான்கு சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார், சிறந்த ஸ்கோராக 241* ரன்கள் பதிவாகியுள்ளது.
இது குறித்து பேசிய சச்சின், இந்தியாவிற்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த மைதானம் சிட்னி என்றும், தனக்கும் நண்பர் லாராவின் பெயரில் மைதானத்தின் வாயிலுக்கு பெயர் வைத்து மரியாதை அளித்த ஆஸ்திரேலியாவின் இந்த வகையான செயலுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில்சிட்னிக்கு வரஇருப்பதாகவும் டெண்டுல்கர் கூறினார்.
லாரா பேசும்போது தனக்கும் சிட்னி மைதானத்திற்கும் நிறைய பல சிறப்பு நினைவுகளை கொண்டிருக்கிறது, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு அங்கீகாரம் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என லாரா தெரிவித்தார்.