உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தலைமை நீதிபதி தகவல்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தகவல்.
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோன அப்பதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, புதிய வழக்குகளை மே மாதத்துக்கு பட்டியலிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.