போராட்டக்காரர்களை காலால் உதைத்த காவலர் பணியிட மாற்றம்..!
போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றம்.
நாகை அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தலைத் தடுக்க தடுப்புகள் அமைத்ததற்கு, பேருந்து செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாக கூறி நள்ளிரவில் போராட்டம் நடைபெற்றது.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல், பூட்ஸ் காலால் உதைத்துள்ளார். இதற்க்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி நாகை மாவட்ட எஸ்.பி.ஜவஹர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.