99.9 % மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்.! தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் குறித்து இந்திய பார் கவுன்சில் தீர்மானம்.!
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை நாட்டில் 99.9%-க்கும் மேற்பட்டோர் எதிர்த்து வருகின்றனர். பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும். – இந்திய பார் கவுன்சில் தீர்மானம்.
ஆண் – பெண் இடையிலான திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்ப சட்டம் இருப்பதாகவும், இதனால், ஓரினைசேர்க்கையாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் பதியப்பட்டு மேற்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக 2 பிராமண விளக்கங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில்,முதல் விளக்க அறிக்கையில், ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக வாழ்வது மற்றும் உடலுறவு கொள்வது என்பதை, ஆண் மற்றும் பெண்ணை உள்ளடக்கிய இந்திய திருமணங்கள் உடன் ஒப்பிட முடியாது என வலியுறுத்தி இருந்த்து. ஓரினச்சேர்க்கை திருமணங்களை மத்திய அரசு அங்கீகரிக்காதது என்பது திருமணத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்பதாக கருதப்படாது என்றும் மத்திய அரசு விளக்க அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
மத்திய அரசின் இரண்டாம் விளக்க அறிக்கையில், திருமணம் என்பது, ஆண் மற்றும் பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்ல. அது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு. திருமணத்தை அங்கீகரிப்பது ஒரு சட்டமன்ற செயல்பாடு, இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்கள் குறித்து, இந்திய பார் கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதில், தன்பால் ஈர்ப்பு திருமணங்களால் நாட்டின் கலாசாரம் மற்றும் சமூக கட்டமைப்பு சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நாட்டில் 99.9%-க்கும் மேற்பட்டோர் எதிர்த்து வருகின்றனர். பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் இந்திய பார் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.