செம அப்டேட்…”அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் நடித்து முடித்துள்ள அயலான் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் அறிவித்துள்ளது.
எலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டே இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், CGI காட்சிகளுக்களுக்கான வேலைகள் அதிமாக இருந்த காரணத்தால் அதற்கான வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் படம் வெளியாகாமல் இருந்தது.
இதனையடுத்து, இறுதியாக, ஒரு வழியாக படம் முடிந்து ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அது ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தான்.
We’ve made contact with extraterrestrial life! And we have a visitor from Outer space ???? Expected time of Arrival: Diwali 2023????????
Get ready to welcome our lovely and adorable #Ayalaan ????#AyalaanFromDiwali2023@Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudios… pic.twitter.com/3vW6aIYSgJ
— KJR Studios (@kjr_studios) April 24, 2023
அதன்படி, படம் வரும் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படம் ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.