இந்தியாவில் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் இன்று 6,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோன அப்பதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்தது கொரோனா பாதிப்பு
இந்த நிலையில், இந்தியாவில் நேற்று 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 6,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,48,98,893 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 67,806-லிருந்து 65,683-ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,345-ஆக அதிகரித்துள்ளது.