சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் பயணம்..!

Default Image

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 3 விஞ்ஞானிகள் குழுவினர் சோயூஸ் எம்.எஸ்.-09 விண்கலம் மூலமாக அனுப்பப்பட்டனர்.

கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் ((Roscosmos)) சார்பில் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

நாசாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான செரீனா உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்களும் 2 நாட்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானிகளுடன் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட சைமன் ((CIMON)) என்ற ரோபோவும் முதன்முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளது. ஏர்பஸ் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ 5 கிலோ எடை கொண்டது.

விண்வெளி மையத்தில் பணியில் இருக்கும் விஞ்ஞானிகளுடன் உரையாடி, அவர்கள் முடிவுகளை எடுப்பதில் இந்த ரோபோ உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn