சென்னை திமுக எம்எல்ஏ வீட்டில் வருமானவரித்துறை சோதனை.!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
பல கோடி வரிஏய்ப்பு புகாரில் சென்னை, திருச்சி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், எம்எல்ஏ வீட்டிலும் ஆய்வு மேற்கொன்டு வருகின்றனர். அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.