தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தில் இருந்து சிறிது விட வைத்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை சற்று குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று காலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், திருத்தணியில் 3 செ.மீ, திருவாலங்காடு, பள்ளிபட்டு, செங்குன்றம், சோழவரத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.