10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில், 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோ எழுதுகின்றனர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 21ம் தேதி முடிவடைந்து, தற்போது கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 முதல் மே 3ம் தேதி நடைபெறகிறது.
இந்நிலையில், ஆங்கில தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 4, 5, 6 ஆகிய 1 மதிப்பெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 2-வது வினாவுக்கும் சேர்த்து மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்க இருப்பதாக தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது. மே-17 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.