ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் 1000 விமானம் கையாண்டு சாதித்தது மும்பை விமான நிலையம்..!
மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் மொத்தம் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன.
பெரும்பாலும் முதன்மையான ஓடுபாதையில் மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரே ஓடுபாதை கொண்ட விமான நிலையங்களிலேயே மிகவும் அதிகம் போக்குவரத்தை கொண்டது என்கிற பெருமை மும்பை விமான நிலையத்துக்கு உண்டு.
இந்நிலையில் செவ்வாயன்று 24மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து மூன்று விமானங்கள் இந்த நிலையத்துக்கு வந்து சென்றுள்ளன. ஏற்கெனவே பிப்ரவரி மூன்றாம் தேதி ஒரே நாளில் 980விமானங்கள் வந்து சென்றது சாதனையாக இருந்தது.
அதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி 969விமானங்கள் வந்து சென்றன. மும்பை விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக உள்ள லண்டன் காட்விக் விமான நிலையம் ஒரு நாளைக்கு எண்ணூற்றுக்கு மேற்பட்ட விமானங்களை இயக்கி இரண்டாமிடத்தில் உள்ளது.