தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த கந்தையா குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி..!
விஜய் தூத்துக்குடியில் துப்பாக்கியால் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்தார்.
நேற்று இரவு அனைவரின் வீட்டிற்கும் சென்று ரூ. 1 லட்சமும் கொடுத்துள்ளார். இப்போது கந்தையாவின் மனைவி விஜய்யிடம், எனக்கு 18 வயது புத்திசுவாதீனம் இல்லாத மகன் இருக்கான், என் கணவர் சம்பளத்தில் வாழ்ந்தோம் இனி என்ன செய்வது தெரியவில்லை என்றேன். அதோடு அவரிடம் என் மகனை குணப்படுத்த எனக்கு வழி தெரியவில்லை. நீங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.
அதற்கு அவர் உடனே, நல்ல மனநல மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன், கவலைப்படாதீர்கள் என்று கூறி ஒரு போன் நம்பர் கொடுத்தார்.
நான் சென்னை போனதும் செய்கிறேன் என்றார், அது எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்று பேசியுள்ளார்.