காலா வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும்!ரஜினிகாந்த்
காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார்.
காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது.காலாவை படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார் .
காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல இதை புரிந்து கொள்ள வேண்டும். காலா வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கன்னடத்தில்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கருத்து:
படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது என்றும் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.