IPL MI vs PBKS: அதிரடி காட்டிய பஞ்சாப்; மும்பை அணி வெற்றி பெற இதுதான் இலக்கு.!
ஐபிஎல் தொடரில் இன்றைய MI vs PBKS போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214/8 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மேத்தியூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இன்னிங்க்சை தொடங்கினர்.
மேத்தியூ ஷார்ட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இறங்கிய அதர்வா டைட்(29 ரன்கள்) பிரப்சிம்ரன் சிங் (26 ரன்கள்) உடன் சேர்ந்து ஓரளவு ரன்கள் குவித்தனர். இதையடுத்து சீராக விக்கெட்களை இழந்து தடுமாறிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் சாம் கரன் மற்றும் ஹர்பிரீத் சிங் பாட்டியா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
அபாரமாக விளையாடிய சாம் கரன் 55 ரன்களும், ஹர்பிரீத் சிங் பாட்டியா 41 ரன்களும் குவித்தனர், முடிவில் ஜிதேஷ் சர்மா(25 ரன்கள்) சில சிக்ஸர்களை அடித்து பறக்க விட்டார், இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் சாவ்லா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.