விமானங்களைப் போல இனி ரயில்களிலும் அதிக சுமை கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் ?

Default Image

 இனி ரயில்களிலும் விமானங்களைப் போன்று  அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமை கொண்டு சென்றால் 6 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிகள் அதிக சுமை ஏற்றிச் செல்வதாக வந்த புகார்களை அடுத்து, ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் அபராத நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணி 35 கிலோ வரையிலும், படுக்கை வகுப்பு பிரிவில் செல்லும் பயணி 40 கிலோ வரையிலும் எந்த கட்டணமும் இன்றி சுமை கொண்டு செல்லலாம். அதே வகுப்பில் செல்லும் பயணிகள் 70 கிலோ மற்றும் 80 கிலோ வரை கட்டணம் செலுத்தி சுமை கொண்டு செல்லலாம்.

இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதை விட அதிக சுமையை கொண்டு செல்லும் ரயில் பயணிகளுக்கு கட்டணத்தைப் போல் 6 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review