அசாமில் கடும் புயலால் 7 வயது குழந்தை பலி, 428 குடும்பங்கள் பாதிப்பு!
அசாமில் கடும் புயலால் 7 வயது குழந்தை பலியான நிலையில் 428 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாமில் நேற்று வீசிய கடுமையான புயல் காரணமாக கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ஏழு வயது குழந்தை உயிரிழந்தது. புயலால் பதர்கண்டி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், பத்தர்கண்டியின் ஐந்து கிராம பஞ்சாயத்துகளில் 428 குடும்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். புயலால் அப்பகுதியில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.