கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் மனு ஏற்பு – அதிமுக எதிர்ப்பு.!

Default Image

கர்நாடக தேர்தலில் 2 தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில், கர்நாடக தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வேட்பாளரை அறிவித்து தனியாக களம் காணுகிறது.

ஓபிஎஸ் மனுக்கள் ஏற்பு:

இதனைத்தொடர்ந்து, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தானியே வேட்பாளர்கள் அறியவித்தனர். இதில், ஓபிஎஸ் அறிவித்த 3 தொகுதி வேட்பாளர்களில் 2 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இபிஎஸ் தரப்பு ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிமுக எதிர்ப்பு:

இந்நிலையில், கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனுவை அதிமுக என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலம், இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட ஈபிஎஸ்க்கு மட்டுமே அதிகாரம் உண்டு. உண்மையான அதிமுக தாங்கள்தான் என கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை :

நேற்று முன்தினம் தான் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. ஆனால், தற்போது ஓபிஎஸ் அணிக்கு அதிமுக என்று காந்திநகர் தொகுதியில் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் சற்று குழப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும், கர்நாடகாவில் அதிமுக பெரும்பான்மையில்லாத காரணத்தால் இரட்டை இலை சின்னம் இரு தரப்புக்கும் கிடைப்பது சிரமமே என்றும், அங்கு அதிமுக சுயேச்சை போல் தான் போட்டியிடும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்