12 மணிநேர வேலை… தொழிற்சாலை திருத்த சட்டம்.! அரசு அளிக்கும் விளக்கம்.!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் திருத்த சட்டம் பற்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் நேற்று திமுகவை தர தவிர திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், குரல் வாக்கு எடுப்பு மூலம் தொழிற்சாலைகள் திருத்த சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேறியது.  இந்த சட்டத்தினை அறிவித்த பின்னர், பல்வேறு கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பலர் போராட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு இந்த திருத்த சட்டம் குறித்த விளக்கத்தையும் அறிவித்தது.

தமிழக அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தில் அறிவித்துள்ள திருத்தங்கள் பற்றி இங்கே காணலாம்…

  • தற்போது நடைமுறையில் இருக்கும் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • சிறப்பு வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே தற்போதுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆலை நிர்வாகம் கூறினாலும், 12 மணி நேரம் பணியானது தொழிலாளர்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் வேலை செய்ய ஏதுவாக குளிரூட்டப்பட்ட அறை. உகந்த பணிச்சூழல், போக்குவரத்து, அருகிலேயே தங்கும் இட வசதிகள் ஆகியவை இருந்தால் மட்டுமே 12 மணி நேர பணி வழங்க தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
  • வாரத்தில் நான்கு நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் முழு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
  • வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணி புரியும் தொழிலாளர்களுக்கு அதனை தாண்டி வேலை செய்யும் கூடுதல் நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும்.
  • வாரத்திற்கு மொத்தமாக 60 மணி நேரம் மட்டுமே பணிபுரிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தொழிற்சாலை திறப்பு சட்டம் 65ஏ-யின் கீழ் அனைத்து தொழிலாளர்களும் அவரவரின் விருப்பம் இருந்தால் மட்டுமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • இச்சட்டம் வாயிலாக இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருகும்.

இவ்வாறு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் குறித்தும், 12 மணிநேர வேலை பணி குறித்தும் அரசு விளக்கங்களை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்