கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் எப்போது ஏற்படும்..? அதை எப்படி தடுப்பது..?

Default Image

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான்

கர்ப்பகால நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம், எனவே உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க சிகிச்சையைத் தொடங்கலாம். கர்ப்பகால நீரிழிவு பொதுவாக கர்ப்பத்தின் 24 வது வாரத்தில் உருவாகிறது, எனவே நீங்கள் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில் நீரிழிவு நோய் பிரச்னை உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான். ஆனால் கர்ப்ப காலத்திற்குப் பின் உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் பிரச்சினை வந்தால் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால் சில நேரங்களில் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இன்சுலின் தேவைப்படலாம். கர்ப்பிணி சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை அலட்சியம் செய்தால் அது அவருக்கு மட்டுமில்லாத அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு உடல் நலம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு நோயை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது. கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவது ஆபத்தான ஒன்று அல்ல. அதை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது தான்  தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஆபத்தை உண்டு பண்ண கூடும்.

pregnant 2

கர்ப்பகால சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரும் என்றால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்கனவே உள்ளவர்கள், அதிக எடை கொண்ட குழந்தையின் பிறப்பை உடையவர்கள், ப்ரீ டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படக்கூடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் பிரச்சனையால் தனிப்பட்ட அறிகுறிகள் அதிகமாக தெரியாவிட்டாலும் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது,  அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல், தாகம், சோர்வு போன்றவை காணப்படலாம். எனவே கர்ப்பகால சர்க்கரை நோய் பிரச்சனையை சரிசெய்ய தேவையான சிகிச்சையை மேற்கொண்டால் தான், குழந்தை பிறப்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்