மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு! பொதுச்செயலாளர் தேர்வு அடிப்படை விதிகளுக்கு விரோதமானது – ஓபிஎஸ்
செயற்கையான முறையில் பல்வேறு நடவடிக்கைகைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதிமுக ஓபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இரண்டாம் நாள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றுது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு வீசாரணை நடத்தினர். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்தார். அப்போது கூறுகையில், ஜூலை 11 பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளர் தேர்வு அதிமுகவின் விதிகளுக்கு எதிரானது.
அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் விதி, அதனை மாற்ற முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தீர்மானம், பொதுக்குழுவில் முன்வைக்கப்படவில்லை. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் முன் வைக்கப்படவில்லை என்றனர்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சி வீதியில் இல்லை. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் பதவி காலியானதாக எப்படி கூற முடியும்? பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை கொண்டு வந்தார்கள் என குற்றசாட்டியுள்ளார்.
சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் விதிக்கப்படாத நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டன. எனவே, தனி நீதிபதி அடிப்படை கட்டமைப்பு விதிகளை கவனிக்க தவறி விட்டார் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.