போர் விமான பேரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்…!

இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு நடைபெற்ற பேரத்தில் ஊழல் நடந்து உள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டதை
அடுத்து ரபேல் போர் விமான ஒப்பந்தம், காங்கிரஸ் அரசால் பேசப்பட்டதை விட சிறந்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ஒப்பந்த விலை தொடர்பாக தகவல் தெரிவிப்பது தேச பாதுகாப்பிற்கு எச்சரிகையானது கிடையாது என்று காங்கிரஸ் கூறியது.
 இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியபடி ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை. இது தொடர்பான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காக நாங்கள் நேரம் செலவிட்டோம். அது இரு அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆகும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று கூறினார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஒரு பைசா கூட முறைகேடு கிடையாது என்பதை என்னால் உறுதிப்பட கூற முடியும் என்ற நிர்மலா சீதாராமன், இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கத்துடன் சுமத்தப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment