கர்நாடக தேர்தல் – 3,632 பேர் வேட்புமனு தாக்கல்… இன்று பரிசீலனை!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுமார் 3,600 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல்.
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 3,632 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில், 3,327 பேர் ஆண் வேட்பாளர்கள், 304 பேர் பென வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக சார்பில் 707, காங்கிரஸ் 651, மத சார்பற்ற ஜனதா தளம் 455, ஆம் ஆத்மி 373, பகுஜன் சமாஜ் சார்பில் 179, கம்யூனிஸ்ட் கட்சி, என்பிபி கட்சிகள் தலா 5, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 1,007, சுயாட்சி வேட்பாளர்கள் 1,720 பேர் வேட்புமனு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலினை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 24-ம் தேதி கடைசி நாளாகும்.