பொள்ளாச்சி, கோடநாடு.. நீங்க என்ன செஞ்சீங்க.. நாங்க வந்துதான் நடவடிக்கை – முதலமைச்சர் ஆவேச பதிலடி

Default Image

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை என முதலமைச்சர் பதிலடி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் சம்பவம் முதல் பொள்ளாச்சி, கோடநாடு, தூத்துகுட்டி துப்பாக்கிசூடு வரை நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஆவேசம்:

அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்,  நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம் என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேச பதிலடி கொடுத்தார்.

மெத்தன போக்கு:

முதல்வர் கூறுகையில், கோடநாடு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்தது யார்?, அதிமுக அரசின் மெத்தன போக்கால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. கோடநாடு வழக்கில் திமுக அரசு நிச்சயம் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் கண்டுபிடிப்போம்:

கோடநாடு வழக்கில் 302 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தி தடயங்கள் சேகரித்து வைத்து இருந்தால் வழக்கை விரைவாக முடித்திருக்க முடியும். எனவே உண்மையை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என முதல்வர் உறுதி அளித்தார்.

சிபிஐ விசாரிக்க வழக்கு:

இபிஎஸ் கூறுகையில், கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. கோடநாடு பங்களா ஜெயலலிதா வீடு அல்ல, மற்றொருவருடையது என தெரிவிக்க, இது ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், அவர் வசித்த இடமாகவும் இருந்ததுதான் கோடநாடு பங்களா என முதல்வர் பதிலளித்தார்.

 மிரட்டல்:

ஜெயலலிதா சாதாரண நபர் அல்ல, முதலமைச்சராக இருந்தவர், அவர் இருந்த கொடநாடு பங்களாவில் சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. குற்றவாளியை நிச்சயம் கண்டுபிடிப்போம் என முதல்வர் கூற, ஏதேதோ ரூபத்தில் மிரட்டி பார்க்கிறார்கள், எதுவும் நடக்காது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கு தொடர உள்ளோம் என இபிஎஸ் தெரிவித்தார்.

நிர்வாக சீர்கேடு:

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்து பேசவில்லை என பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எழுப்பினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சி, கோடநாடு விவகாரங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆட்சி நடைபெறும் பொழுதும் ஒவ்வொரு தவறுகள் நடைபெறும்தான். ஆனால் நடைபெறுகின்ற நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்