விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கப்பட்ட விவகாரம்; முதல்வர் பதில்.!
அம்பாசமுத்திரம் பல்பிடுங்கப்பட்ட வழக்கில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
பல்பிடுங்கிய விவகாரம்:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில், அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல்பிடுங்கிய விவகாரத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
சட்டப்பேரவை:
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், சமூக வலைதளங்களில் புகார் வந்த உடனேயே, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கடந்த மார்ச் 26 ஆம் தேதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, மார்ச் 29 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முதலமைச்சர் விளக்கம்:
இதனையடுத்து திருநெல்வேலி ஆட்சித்தலைவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், உயர்மட்ட விசாரணைக்குழு அதிகாரி அமுதா ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டு, பல்வீர் சிங் மீது ஏப்ரல் 17 ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு பின் ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு தற்போது சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.