IPL RCB vs PBKS: டாஸ் வென்றது பஞ்சாப் அணி; ஆர்.சி.பி முதலில் பேட்டிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs PBKS போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், மொஹாலியின் ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் இருக்கிறது.
பஞ்சாப் அணி தான் விளையாடிய கடைசி போட்டியில் லக்னோ அணியை 2 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று, வலிமையுடன் இன்றைய போட்டியில் வெல்லும் நோக்கில் களமிறங்குகிறது. பெங்களூரு அணியைப் பொறுத்தவரை சென்னை அணியுடன் கடைசி போட்டியில், வெற்றியின் இறுதிவரை சென்று நூலிழையில் தவறவிட்டது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் நிச்சயம் வெல்லும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு அணி: விராட் கோலி (C), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (W), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பர்னெல், முகமது சிராஜ்
பஞ்சாப் அணி: அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன்(C), ஜிதேஷ் ஷர்மா(W), ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்