தொடரும் மழை.. புரண்டோடும் வெள்ளம் ! 10 பேர் பலி..!
மிசோரம் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 10 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலை மாநிலமான மிசோரத்தில் பெய்து வரும் மழையால், மண் சரிவும் நிகழ்ந்துள்ளது. லுங்கேலி நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வெள்ளத்தின் வேகத்தில் மண் அரித்துச் செல்லப்பட்டதால், மலை சரிவில் கட்டப்பட்டிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடரும் மழையால் அந்த மாநிலத்தின் பல ஊர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.