தேர்வு ஓவர்…நாளை முதல் ’10-ஆம் வகுப்பு’ மாணவர்களுக்கு கோடை விடுமுறை.!!
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால் நாளை முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோ எழுதுகின்றனர்.
நாளை முதல் விடுமுறை
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல்
கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.
எனவே, நாளை முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.25 முதல் மே 3ம் தேதி நடைபெறகிறது. விரைவில் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.