ஓரே ஆண்டில் ஆறாவது முறை.! வாகன விலையைக் குறைத்த டெஸ்லா..!

Default Image

அமெரிக்காவில் டெஸ்லா தனது மின்சார வாகனங்களின் விலையை இன்று குறைத்துள்ளது.

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவில் தனது மாடல்-ஒய் (Model Y) மற்றும் மாடல் 3 மின்சார வாகனங்களின் விலையை இன்று குறைத்துள்ளது. இது இந்த ஆண்டில் அமெரிக்காவில் ஆறாவது முறையாக விலை குறைப்பு ஆகும். முன்னதாக, டெஸ்லா ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதன் மின்சார வாகனங்களுக்கான விலையைக் குறைந்திருந்தது.

தற்பொழுது, அதிக தூரம் செல்லும் தன்மை மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட மாடல்-ஒய் (Model Y) வகை வாகனங்களின் விலை ஒவ்வொன்றும் $3000 (ரூ.2,46,579 லட்சம்) குறைக்கப்படும் என்றும் மாடல் 3 ரியர்-வீல் டிரைவ் (Model 3 Rear Wheel Drive) வகை வாகனங்களின் விலை ஒவ்வொன்றும் $2000 (ரூ.1,64,386 லட்சம்) முதல் $39,990 (ரூ.31 லட்சம்) வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் 321,000 க்கும மேற்பட்ட டெஸ்லா வாகனங்களை, தொழிநுட்பக்கோளாறு காரணமாக திரும்பப்பெற்றது. காரின் பின்புற விளக்கு மற்றும் ஏர்பேக் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30,000 மாடல்-எக்ஸ்(Model-X) கார்களை நிறுவனம் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அதன் பங்குகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3% குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்