ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு… ப .சிதம்பரத்திடம் 7 மணி நேரம் கிடுப்புடி..!

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது.
அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீண்டது.
பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. சுமார் 6 1/2 மணி நேரத்திற்கு பிறகு விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment