சென்னை கட்டட விபத்தில் யாரும் சிக்கவில்லை – அமைச்சர் கே.என். நேரு
நான்கு மாடி கட்டட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, நான்கு மாடி கட்டட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை.
நான்கு தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளிதந்தார். கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் மட்டுமே காயம் அடைந்தனர். இதுவரை கட்டிடக்கழிவுகள் 30 லாரிகளில் ஏற்றி அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.