இது தான் தனக்கு கடைசி தேர்தல்; சித்தராமையா அதிரடி முடிவு.!
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இந்த சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு கடைசி என்று கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தேர்தல் அரசியலில் தனக்கு இந்த சட்டமன்றத் தேர்தல்தான் கடைசிப் போட்டி என்று அறிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் மைசூரில் உள்ள வருணாவில் நடந்த பேரணியில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, இந்த தேர்தலுக்குப் பிறகு, நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் சித்தராமையா, 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித்தராமையா, தனது அரசியலுக்கு ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.