உ.பி கேங்ஸ்டர் சுட்டுக்கொலை.! 5 காவல்துறையினர் சஸ்பெண்ட்..!
உத்திர பிரதேசத்தில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று, உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பியும், கேங்ஸ்டாருமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் , வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்னர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டபோது, காவலர்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டு ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை கொலை செய்தனர்.
சட்டம் ஒழுங்கு :
காவலர்கள் முன்னிலையில், பத்திரிக்கையாளர்கள் போல வந்து மர்ம நபர்கள் நடத்திய இரட்டை கொலை துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்பகுதியின் சட்ட ஒழுங்கு பற்றிய பல்வேறு கேள்விகள் எழுந்தன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 5 காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
5 காவலர்கள் சஸ்பெண்ட் :
அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை செய்யப்பட்ட MLN மருத்துவக் கல்லூரி வளாகம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றிய ஐந்து காவல்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.