சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு..!

Default Image

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. 

சட்டப்பேரவையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.

ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம் என முதல்வர் பேசியிருந்தார்.

இந்த  நிலையில், வானதி சீனிவாசன் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் முதல்வரின் தீர்மானம் மீதி வானதி சீனிவாசன் பேசியிருந்தார். வானதி சீனிவாசனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீங்கியதால், பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளும் திமுக அரசு, வேங்கை வயல் பிரச்னை, பட்டியலின மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அதனை தடுப்பதற்கான சட்டம் இவற்றை பற்றி கவலைப்படமால், முழுக்க, முழுக்க அரசியல் நோக்கத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்