உடல் நலக்குறைவால் நேபாள அதிபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.!
உடல் நலக்குறைவால் நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்சந்திர பவுடல் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நேபாளத்தின் மகாராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கு அவரது உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மேல் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளாராம்.
இந்த மாத தொடக்கத்தில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 நாட்களில் வீடு திரும்பினார், அந்த வகையில் உடல் நலக்குறைவால் நேபாள அதிபர் இரண்டாவது முறையாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிரதமர் புஷ்ப கமல் தஹால், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான பூர்ணா பகதூர் கட்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் தான், நேபாளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான ராம்சந்திர பவுடல் நேபாள அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.