நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த
திரு.பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் 17-4-2023 அன்று மாலை நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு தெரிவித்துக் கொள்வதோடு, ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின்
பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்
உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.