இளம் ஐபிஎல் வீரரின் நெகிழ வைக்கும் செயல்.! ’50 லட்ச’ ருபாய் செலவில் ‘அவர்களுக்காக’ தங்கும் விடுதி.!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் யாராலும் மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் என்றே கூறலாம். ஆம், கடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி 5 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் விளாசினார்.
இதன் மூலம், யாருயா..? இந்த ரிங்கு சிங் என்கிற அளவிற்கு அனைவரும் ஆச்சரியத்துடன் அவருடைய விவரங்களை தேடினார்கள் என்றே கூறலாம். ரிங்கு சிங்குவின் தந்தை எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் ஒருவரின் மகனாக மிகவும் கஷ்டபட்டு போராடி இந்த இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய கிரிக்கெட் கனவு நிறைவேறி விட்ட நிலையில், மற்றவர்களும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் 25 வயதான இளம் கிரிக்கெட் வீரரான இவர் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதற்காக ரூ.50 லட்சத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. அவர் கட்டும் இந்த விடுதியில் 14 அறைகள் தனித்தனி கழிப்பறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 4 பயிற்சியாளர்கள் தங்க முடியும். இது வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மிதமான பின்னணி தங்குமிடத்தை வழங்கும்.
????| KKR star Rinku Singh spends lakhs to build hostel for poverty-stricken cricketers in Aligarh, Uttar Pradesh. The facility can accommodate more than 50 children. pic.twitter.com/w1qOIY5vJY
— KnightRidersXtra (@KRxtra) April 17, 2023
இந்த வசதியுடன் கட்டப்பட்டுள்ள கேண்டீனில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவும் வழங்கப்படும். இதற்கான வேலைகள் சுமார் 90 சதவீத முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பியதும் ரிங்கு சிங் அதைத் திறந்து வைப்பார். இந்த தகவலை ரிங்குவின் குழந்தை பருவ கிரிக்கெட் பயிற்சியாளர் மசூதுஸ்-ஜாபர் அமினி தெரிவித்துள்ளார். ரிங்கு சிங்குவின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.